• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள இருள் அகன்று ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளி பண்டிகையின் உண்மையான அர்த்தம் என்பது வெறும் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மானுடப் பண்புகளின் ஒளியை ஏற்றி வைப்பதாகும். எனவே, வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்பிற்காக நாம் தற்போது உறுதியுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவத்துடன் நிமிர்ந்து நிற்கும் “அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக” இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒன்றாகப் பயணிக்கும் இந்தப் பாதையானது, இந்த தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

May be an image of text

 

Related

Tags: anura kumara dissanayakeDeepavaliதீபாவளிவாழ்த்துஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

Next Post

Related Posts

இலங்கை

2026-11-08
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!
இலங்கை

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்
இலங்கை

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

2026-11-07
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!
இலங்கை

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

2026-11-07
வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு!

2026-11-07
தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை
இலங்கை

தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை

2026-11-07
Next Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10

0
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

0
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

0
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

0
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

0

2026-11-08
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

2026-11-08
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

2026-11-07
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

2026-11-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: