• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

How to choose snacks that are rich in protein and fiber?

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/09
in பல்சுவை
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையிலோ அல்லது மாலை நேரத்திலோ திடீரென பசி ஏற்படுவது இயல்பான ஒன்று. அந்த நேரத்தில் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுவது பலரது வழக்கமாக உள்ளது.

இத்தகைய உணவுகளை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்த்து, உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

வீட்டுச் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சத்தான சிற்றுண்டிகளைத் தயாரிக்க முடியும். இவை திடீர் பசியைத் தணிப்பதுடன், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகளையும் வழங்குகின்றன.

அத்தகைய சில ஆரோக்கியமான சிற்றுண்டிகளைப் பற்றிப் பார்ப்போம்..வறுத்த கொண்டைக்கடலைபுரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வறுத்த கொண்டைக்கடலை சிறந்த சிற்றுண்டித் தேர்வாகும். இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுகிறது.

மேலும், உடலுக்குத் தேவையான தாவரப் புரதம் மற்றும் இரும்புச்சத்தும் இதில் கிடைக்கின்றன. மாலை நேரத்தில் தேநீருடன் வறுத்த கொண்டைக்கடலையைச் சாப்பிடலாம்.

வறுத்த மக்கானாதாமரை விதைகள் என்று அழைக்கப்படும் மக்கானாவைச் சிறிதளவு நெய் அல்லது எண்ணெயில் வறுத்து, மிளகு, சீரகத்தூள், மஞ்சள்தூள் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

அதிக எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பாகத் தயாரிக்க முடிவதால், மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஏற்றதாக இருக்கும். இதில் புரதம் மற்றும் சில தாதுச்சத்துகள் உள்ளன.

முளைகட்டிய பயறு சாலட்பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட் ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கலாம்.

சிறிதளவு எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்தால் சுவையான ‘ஸ்பிரவுட்ஸ் சாட்’ தயார். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கின்றன. காய்கறிகளையும் சேர்த்துச் சாப்பிடுவதால் கூடுதல் ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

பழங்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும்போது, செயற்கை இனிப்புகள் கலந்த உணவுகளைத் தவிர்த்து இயற்கையான பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம் போன்ற பழங்களைச் சிறிய அளவில் சாப்பிடலாம்.

இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் செரிமானத்துக்கு உதவுவதுடன், பசியைக் கட்டுப்படுத்தவும் துணைபுரிகின்றன.

காய்கறிகள் கலந்த அவல்அவல் எளிதில் தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாகும். அவலை ஊறவைத்து, அதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்த்து லேசாக வதக்கலாம். சிறிதளவு வேர்க்கடலை சேர்ப்பதன் மூலம் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளையும் பெறலாம். சுவையாக இருப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் அளிக்கும். அதிக எண்ணெய் சேர்க்காமல் தயாரிப்பது நல்லது.

வேகவைத்த சோளம்மாலை நேரப் பசிக்கு வேகவைத்த சோளம் சிறந்த தேர்வாகும். இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சில வைட்டமின்கள் உள்ளன. சோளத்தை வேகவைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். அதிக வெண்ணெய், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது, வேர்க்கடலைபுரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த வேர்க்கடலை பசியைத் தணிக்க உதவும்.

வறுத்த வேர்க்கடலையைச் சிறிய அளவில் சாப்பிடலாம். விருப்பமிருந்தால் அதனுடன் பொட்டுக்கடலை அல்லது சிறிதளவு வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். இருப்பினும், இதில் கலோரிகள் அதிகம் என்பதால் அளவோடு உட்கொள்வது அவசியம்.

சிற்றுண்டியைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம்!இடைவேளை நேரத்தில் பசி ஏற்படும்போது உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடாமல், தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். அதிக சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அன்றாட உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திடீர் பசியைச் சமாளிப்பதுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

Related

Tags: How to choose snacks that are rich in protein and fiber?
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

Related Posts

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!
சினிமா

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை!
பல்சுவை

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை!

2026-11-07
குளிர்காலத்தில் வறுத்த கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பல்சுவை

குளிர்காலத்தில் வறுத்த கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

2026-11-06
கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?
பல்சுவை

கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

2026-11-04
ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!
பல்சுவை

ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

2026-11-03
தாயின் முகத்தில் புன்னகையை மலரச் செய்த மகனின் இசை!
பல்சுவை

தாயின் முகத்தில் புன்னகையை மலரச் செய்த மகனின் இசை!

2026-11-02

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

0
புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

0
மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!

மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!

0
மசகு எண்ணெய் விலையில் தொடர் சரிவு!

மசகு எண்ணெய் விலையில் தொடர் சரிவு!

0
எகிப்தில் கோர ரயில் விபத்து; 7 பேர் உயிரிழப்பு, 112 பேர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: