சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இன்று (09) காணப்பட்டனர்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் சென்னை விமான நிலையத்தின் மூலமாக கிரீஸிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதில் இந்தத் திருமண விழாவிற்காகச் செல்லும் முக்கியப் பிரமுகர்களைக் காண முடிகிறது.
இந்தத் திருமணம் கிரீஸில் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திககளில், இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் இருக்கும் காணொளி ஒன்றில், அந்த சூப்பர் ஸ்டார் பாரம்பரியமான கருப்பு நிறச் சட்டையும் மவ் (mauve) நிறக் கால்சட்டையும் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இருந்தார்.
இணையத்தில் வலம் வரும் மற்றொரு புகைப்படம், அவர் கிரீஸிற்குச் செல்லும் விமானத்தின் பிசினஸ்-கிளாஸ் பகுதியில் பணியாளர் ஒருவருடன் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது.

சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைப் பகுதியில் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில், துபாய் வழியாக கிரீஸுக்குப் பயணம் செய்துள்ளனர்.
அங்கு நடைபெறவுள்ள திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அவர்கள், நவம்பர் 13 ஆம் திகதி சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















