2020ஆம் ஆண்டு ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இடம்பெற்ற பாரிய விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
குறித்த படப்பிடிப்பின்போது சுமார் 100 அடி உயரத்திலிருந்து கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் நேர்காணல் ஒன்றில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட காஜல் அகர்வால், கிரேன் தனது அருகில் விழுந்துகொண்டிருந்தபோது ஒருவர் தன்னை வேகமாக இழுத்துக் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்தை நினைத்தாலே இப்போதும் உடல் நடுங்குவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விபத்திலிருந்து உயிர் தப்பியது மிகப்பெரிய அதிசயம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் கிருஷ்ண பகவானின் தீவிர பக்தையாக மாறியதாகவும் நடிகை காஜல் அகர்வால் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
















