ஹொலிவுட்டில் ஒஸ்கர் விருதுக்கு இணையாக எம்மி விருதுகள் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த 1949 ஜனவரி 25 முதல் எம்மி விருது வழங்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நியூயோர்க் நகரில் இன்று 54 வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மொத்தம் 16 பிரிவுகளில் சர்வதேச தொலைக்காட்சியில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் எம்மி விருது வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நாடக தொடராக பிரெஞ்சு வரலாற்று தொடர் ‘கரேம்’ (Careme) தேர்வானது.சிறந்த நகைச்சுவை தொடராக டிவிசியோன் பலேர்மோ – சீசன் 2 (கம்யூனிட்டி ஸ்குவாட்) தேர்வானது.
சிறந்த நடிகர் விருதுக்கு அன்பர்கிவபிள் திரைப்படத்திற்காக பாபி ஸ்கோஃபீல்ட் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த நடிகை விருது, ஹோலி ஷிட் திரைப்படத்திற்காக மோனா மினா லியோன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
தொலைக்காட்சி திரைப்படம் அல்லது குறுந்தொடர் விருது, கைதி 951 என்ற தொடருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆவணப்படமாக ‘லூயிஸ் தெரூக்ஸ்: த செட்லர்ஸ்’ தேர்வானது;
நடப்பு நிகழ்வுகள் மற்றும் செய்திகள் பிரிவில், ‘எக்ஸ்போசர்: பிரேக்கிங் ரேங்க்ஸ்’ மற்றும் ‘த வேர்ல்ட்: 24 ஹவர்ஸ் இன் த கில் சோன்’ தேர்வு செய்யப்பட்டன.
திரைக்கதையற்ற மற்றும் சிறு வடிவம் (Non scripted and short form) பிரிவில் ‘எட்சுகேட்டிங் யோர்க்ஷைர் S2 என்ற படமும், ‘த க்ளாஸ் ஆஃப் 2000’ என்ற படமும் தேர்வானது.
சிறப்பு மற்றும் சர்வதேச பிரிவில் ‘த பிலிப்ஸ்டவுன் வையர்கார் கிராண்ட் பிரிக்ஸ், லெய்லா, காபி+பேஸ்ட்+ஸ்டீல்’ ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.
சிறுவர் நிகழ்ச்சிகள் பிரிவில், ‘தி ஸ்கேர்கிரோஸ் வெட்டிங், ஹாரிபிள் சயின்ஸ் மற்றும் டெக்ஸ்டர் பிராக்டர்’ ஆகிய நிகழ்ச்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த ஆண்டிற்கான எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்குபவராக கலந்துகொண்டார்.

















