ஆர்.மனோ
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட புதிய ஒப்பந்தங்களை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
குறிப்பாக, இரு தரப்புக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்பான செலவுகள் இதில் முக்கிய இடம்பெற்றுள்ளன.
எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டால், எல்லைச் சோதனை உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குவதற்கான செலவுகளை ஈடுசெய்யும் விதிமுறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டில் பத்து ஆண்டுகள் வரையிலான ஒப்பந்த முடிவுறுத்தல் விதி இடம்பெற்றுள்ளதுடன்
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதேநேரம் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் சூழலில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமைகளை யார் ஏற்க வேண்டும் என்பதற்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தங்கள் பிரித்தானியாவின் எதிர்கால ஐரோப்பிய உறவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தங்களின் முழுமையான விவரங்கள் வெளியாகும்போது அவற்றின் நிபந்தனைகள் குறித்து மேலும் தெளிவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














