மேஷம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். அழகு, இளமை கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் மறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.
மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
கடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
சிம்மம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சி மேற்கொள்வீர். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு.
துலாம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பூர்வீக வீட்டில் குடிபுக எண்ணுவீர். அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்.
தனுசு: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: தந்தையாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். நான்கைந்து நாட்களாக முடியாமலிருந்த வேலைகள் இன்று முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த விவாதம் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய பங்குதாரரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி, ஆதரவு தருவார்.













