இலங்கையின் முன்னணி சொகுசு ஹோட்டல், உணவக வளாகம் மற்றும் நிகழ்வு மண்டபமான Waters Edge தனது வரலாற்றில் முதல் தடவையாக ஆண்டு வருமானம் 300 கோடி ரூபாவைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த முக்கிய நிதி மைல்கல்லை நிறுவனம் எட்டியுள்ளதாக,Waters Edge தலைவர் திரு. சதுர கிருஷாந்த பெரேரா அண்மையில் அறிவித்தார்.
2024 டிசம்பர் 12ஆம் திகதி நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு. சதுர கிருஷாந்த பெரேரா, தனது தூரநோக்கு, இலட்சியம் மற்றும் புத்தாக்கமான அணுகுமுறையால் இலங்கையின் வர்த்தகத் துறையில் வெற்றிகரமான பாதையை உருவாக்கிய திறமையான தொழிலதிபர் ஆவார்.
அவரது தலைமையின் கீழ், WatersEdge புதிய வர்த்தக உத்திகளையும் செயற்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்தி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ஊழியர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவும் நம்பிக்கையுமே இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நிறுவன வரலாற்றில் முதல் முறையாக, தனது முந்தைய வருமானப் பதிவுகளை முறியடித்து, இதுவரை இல்லாத நிதி மைல்கல்லை WatersEdge நிலைநாட்டியுள்ளது.
விருந்து (Banquet) பிரிவு, உணவு மற்றும் பானப் பிரிவு, அறைகள் பிரிவு உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்தே இந்த வெற்றி கிடைத்துள்ளது.
புதிய சிந்தனைகள், புதிய இலக்குகள் மற்றும் நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகள் மூலம், WatersE எட்ஜை சர்வதேச அங்கீகாரமும் விருதுகளும் பெற்ற நிறுவனமாக உயர்த்துவதே தமது நோக்கம் என திரு. பெரேரா மேலும் தெரிவித்தார். நிலையான அபிவிருத்தி உத்திகளிலும் சிறந்த சேவைத் தரத்தை வழங்குவதிலும் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.
மேலும், தொடர்ச்சியாக 16 மாதங்கள் மாதாந்த இலாபத்தைப் பேணியமை, நிறுவனத்தின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2026 இறுதியில் வரிக்கு முந்திய இலாபமாக 50 கோடி ரூபாவை எட்டும் பாதையில் Waters Edge பயணிக்கிறது.
இந்த சிறப்பான நிதிச் செயல்திறனுக்கு, தலைவர் திரு. சதுர கிருஷாந்த பெரேராவின் தலைமையிலான புதிய முகாமைத்துவ அணுகுமுறை, பொது முகாமையாளர் திரு. இயந்த அபேசிங்கவின் தலைமையிலான நிறுவன முகாமைத்துவம், மற்றும் அனைத்து ஊழியர்களின் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே முக்கிய காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.
















