• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தீபத்தூணில் தீபம் ஏற்றத் தயாராகும் திருப்பரங்குன்றம்!

தீபத்தூணில் தீபம் ஏற்றத் தயாராகும் திருப்பரங்குன்றம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/28
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று (28) மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வைக் கண்காணிப்பதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள், கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி, உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளான எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரின் (CRPF) பாதுகாப்புடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் தீபத்தூண் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவுள்ளனர்.

இதற்கிடையில், தீபத்தூணைச் சுற்றி தற்காலிக மேடைகள் மற்றும் சாரக்கட்டுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இப்பணிகள் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரின் பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன.

மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வைப் பார்வையிடுவதற்கு தங்களால் தெரிவுசெய்யப்படும் 20 முதல் 25 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

ஊடகவியலாளர்களுக்கு மலை உச்சிக்குச் செல்ல அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானம் இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதமை தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் வேண்டுமென்றே மீறியுள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

நேற்றைய (27) தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதிகாரிகளும் கோயில் அறங்காவலர் குழுவினரும் தங்களது அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, அர்ச்சகர்களுடன் கலந்தாலோசித்து இன்று (28) தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், திருப்பரங்குன்றம் மலையின் உரிமை, வழிபாட்டு மரபுகள் மற்றும் இந்து, முஸ்லிம் சமூகங்களின் பயன்பாடு தொடர்பான நீண்டகால சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கடந்த 1915ஆம் ஆண்டு முதல் நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு தற்காலிக ஏற்பாடாகவே அமைந்துள்ளதுடன், இறுதியான சட்டத் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: DeepamThiruparankundramதிருப்பரங்குன்றம்தீபத்தூண்தீபம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடலுக்கு மேலே பறக்கும் கப்பல்! வைரலாகும் அதிசயக் காட்சி

Next Post

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 43 குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டன

Related Posts

திருடப்பட்ட வேனை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

திருடப்பட்ட வேனை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

2026-11-28
தென் கொரியாவில் கோர விபத்து – இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு!
இலங்கை

தென் கொரிய விபத்தில் இலங்கையர்கள் உயிரிழப்பு  – வெளிவிவகார அமைச்சு உறுதி!

2026-11-28
ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!
ஆசிரியர் தெரிவு

ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!

2026-11-28
அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!
அமொிக்கா

அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!

2026-11-28
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!
இலங்கை

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

2026-11-28
சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் 2 முதல் வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் 2 முதல் வகுப்புகளுக்குத் தடை!

2026-11-28
Next Post
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 43 குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டன

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 43 குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 43 குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டன

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 43 குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டன

0
தீபத்தூணில் தீபம் ஏற்றத் தயாராகும் திருப்பரங்குன்றம்!

தீபத்தூணில் தீபம் ஏற்றத் தயாராகும் திருப்பரங்குன்றம்!

0
கடலுக்கு மேலே பறக்கும் கப்பல்! வைரலாகும் அதிசயக் காட்சி

கடலுக்கு மேலே பறக்கும் கப்பல்! வைரலாகும் அதிசயக் காட்சி

0
திருடப்பட்ட வேனை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

திருடப்பட்ட வேனை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

0
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 27,581 மில்லியன் ரூபா வருமானம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: