எரிபொருள் விலை உயர்வுக்கு பா.ஜ.க. அரசே காரணம் – தம்பிதுரை
In இந்தியா September 12, 2018 3:55 pm GMT 0 Comments 1572 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, ஆளும் பாரதிய ஜனதா அரசே காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த அம்மாபட்டி ஊராட்சி பகுதிகளில், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கொடுத்ததன் விளைவாக, இஷ்டம் போல் இலாபத்திற்காக, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாகவும், மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை என்றும், தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.