எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலை கஜகஸ்தானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பல பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் வாகனங்கள் தீவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதேவேளை நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் அரசாங்கத்தின் இராஜினாமாவை அவர் ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் பிரதமராக இடைக்கால அடிப்படையில் நாட்டின் துணைப் பிரதமரான அலிகான் ஸ்மைலோவை நியமித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்க அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் சட்டவிரோதமானது என அந்நட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.