இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 2 இலட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.18 வீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் ஒரே நாளில் 15,389 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்து 21 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 534 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 82 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.