ஸ்கொட்லாந்தில் உள்ள அனைத்து பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை இன்றுக்குள் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்கொட்லாந்து அரசாங்கம், பெப்ரவரி 5ஆம் திகதி கொரோனா வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான காலக்கெடுவாக அமைத்தது.
வியாழக்கிழமை, 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத பேரும், பராமரிப்பு இல்லங்களில் 98 சதவீத வயதானவர்களும், 89 சதவீத பராமரிப்பு இல்ல ஊழியர்களும் தங்களது முதல் அளவை பெற்றுள்ளனர்.
267,000க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப மதிப்பீடுகளை விட இது 230,000 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
75 முதல் 79 வயதுடையவர்களில் 38 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளதாக முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 15ஆம் திகதிக்குள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.