புதிய மாறுபாடு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஒக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் தென்னாபிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி முழுவீச்சில் செயற்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக, பிரித்தானியாவின் தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.