ஜனநாயக குடியரசு கொங்கோவில் அழிவு நிலையில் உள்ள 96 இலட்சம் மக்களுக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில், 1.56 கோடி மக்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு ஆகியவை தேவையாக இருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 1.96 கோடியாக உயர்ந்து உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கோவில் 52 இலட்சம் பேர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்துள்ளனர். அண்டை நாடுகளில் இருந்து 5.27 இலட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆயுத மோதல், வன்முறை பரவல் ஒருபுறமும், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஆகியவை மறுபுறமும் கொங்கோவை ஆட்டிபடைத்து வருகின்றது. இங்கு உணவு பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகின்றது.