பிரான்ஸ் தலைநகர் பரிசில் சுகாதார மீறல் காரணமாக இதுவரை 46 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவார இறுதியிலும் பல உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் மூடப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 127 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு பரிசில் 300இல் இருந்து 400 வரையான உணவகங்கள், தேநீர் விடுதிகள், மதுச்சாலைகள் போன்றவை சோதனையிடப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 15ஆம் திகதியில் இருந்து 1.9 மில்லியன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 177,000 கடை உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.