கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரு நாடுகளுக்கு இடையில் பயணிக்க வழி வகுக்க இஸ்ரேலும் கிரேக்கமும் ஒப்புக்கொண்டன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் அறிவித்தனர்.
தடுப்பூசி சான்றிதழ்கள் உள்ள சுற்றுலாப் பயணிகளை எந்த வரம்புகளும் இல்லாமல், சுய தனிமைப்படுத்தல் இல்லாமல் நாடுகளுக்கு இடையில் செல்ல அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
11 மாத தொற்றுநோய்களின் போது பயணக் கட்டுப்பாடுகளால் இரு பொருளாதாரங்களும் சுற்றுலா துறையினால் கடுமையான பேரழிவினை எதிர்கொண்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு, கடந்த ஆண்டு சர்வதேச வருகை 74 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், 1.3 டிரில்லியன் டொலர்கள் (1 டிரில்லியன் யூரோக்கள்) வருவாயை இழந்தது. 120 மில்லியன் வேலைகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.