ஒஸ்கார் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில், ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் இடம்பெறாதது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ படம் ‘மாவோயிஸ்ட்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டது. இது, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் போட்டியிட்டது.
இந்நிலையில், அந்தப் பிரிவில் ஒஸ்கார் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் இடம்பெறவில்லை.
இந்தப்படம், ஒஸ்கார் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் பட்டியலில் கூட இடம்பெறாதது இரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஒஸ்கார் விருது விழா எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.