அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக செனட் சபை வாக்களித்துள்ளது.
வாக்கெடுப்பில், டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக 56 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய சாதாரண பெரும்பான்மையின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கியமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் மீதான இரண்டாவது நாடாளுமன்ற விசாரணைகள் இன்று முதல் அமெரிக்க செனட் சபையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், டொனால்ட் ட்ரம்ப்பை குற்றவாளியாக பெயரிடுவதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.