ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் ஏழு இலட்சத்து 52ஆயிரத்து 482பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 19ஆயிரத்து 135பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 48பேர் பாதிக்கப்பட்டதோடு 79பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 34ஆயிரத்து 813பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 955பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 534பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.