அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்ய வீரர்களான கரேன் கச்சனோவ் மற்றும் ஹென்ரி ரூபெல்வ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ரஷ்ய வீரரான கரேன் கச்சனோவ், லித்துவேனியாவின் ரிசார்டாஸ் பெரான்கிஸ்சுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கரேன் கச்சனோவ், 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ரஷ்ய வீரரான ஹென்ரி ரூபெல்வ், பிரேஸிலின் தியாகோ மான்டீரோவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹென்ரி ரூபெல்வ் 6-4, 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.