கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 185பேர் பாதிக்கப்பட்டதோடு 95பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 13ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 004பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 38ஆயிரத்து 242பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 672பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஏழு இலட்சத்து 54ஆயிரத்து 736பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.