பிரித்தானிய நாடுகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ் உள்ளது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
இது ‘உலகின் முதல் நாடுகளில் ஒன்றாகும்’ எனவும் மார்க் டிரேக்ஃபோர்ட் டுவீட் செய்துள்ளார்.
முதல் முன்னுரிமை குழுக்களில் 655,000க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு வழங்கப்பட்டுள்ளது.
இது வேல்ஸின் மக்கள் தொகையில் 20.8 சதவீதம் மற்றும் இங்கிலாந்தில் 19.7 சதவீதம், ஸ்கொட்லாந்தில் 18 சதவீதம் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 17.6 சதவீதத்துடன் ஒப்பிடுகிறது.
வேல்ஸில் தடுப்பூசி திட்டம், பிரித்தானியாவின் மற்ற பகுதிகளை விட மெதுவான தொடக்கத்தை எதிர்கொண்டதாக முன்னர் விமர்சனங்கள் எழுந்தன.
பெப்ரவரி நடுப்பகுதியில் சுகாதார ஊழியர்கள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட 750,000 பேருக்கு கீழ் இருப்பதை உறுதி செய்வதே வேல்ஸின் நோக்கம்.