கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி அடுத்த முன்னுரிமை குழுக்களின் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் அடுத்த வாரத்தில் தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாகாணத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.
இருப்பினும் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் எதிர்பாராத விதமாக சிக்கல் ஏற்பட்டால் மாகாணத்தின் தடுப்பூசி திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என சுகாதார தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற ஜெனரல் ரிக் ஹில்லியர் தெரிவித்துள்ளார்.