சீனா நன்கொடையாக அளித்த 200,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிச் சென்ற விமானம், சிம்பாப்வே தலைநகர் ஹராரேவை இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ளது.
இதனை அடுத்து மார்ச் மாத தொடக்கத்தில் சீனாவிலிருந்து மேலும் 600,000 டோஸ் கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கிடைக்கும் என தகவல் தொடர்பாடல் அமைச்சர் மோனிகா முத்ஸ்வாங்வா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக சிம்பாப்வே 100 மில்லியன் டொலர்களை நிதியினை ஒதுக்கியுள்ளது.
மக்கள் தொகையில் 60 விகிதமானவருக்கு போடுவதற்கு தேவையான 20 மில்லியன் டோஸை வாங்க சிம்பாப்வே எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில் சீனாவிடம் இருந்து மட்டும் சுமார் 1.8 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் பெறப்படும் என அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மேற்கு ஆபிரிக்க நாடான செனகல் 200,000 டோஸ் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு 3.7 மில்லியன் டொலரை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.