அதிக ஆபத்துள்ள நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் அனைத்து பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் மக்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
33 நாடுகள் கொண்ட பிரித்தானியாவின் அதிக ஆபத்துள்ள நாடுகளின் சிவப்பு பட்டியலில் போர்த்துக்கள், பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்றின் மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்த, போக்குவரத்து மற்றும் பரிசோதனை செலவு ஆகியவற்றை உள்ளடக்கி அவர்கள் 1,750 பவுண்ட்ஸ் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அதன்படி தற்போது பிரித்தானியாவில் புதிய தனிமைப்படுத்தல் முறைக்கு 4,963 அறைகளை வழங்கும் 16 ஹோட்டல்களுடன் இதுவரை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.