சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் மட்ரிட்டில் குறைந்தது 14 பேரும், பார்சிலோனாவில் 29 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸையும் ஸ்பெயினின் முடியாட்சியையும் அவமதித்து டுவீட் செய்ததற்காக பப்லோ ஹஸல் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாள் கழித்து போராட்டங்கள் வெடித்தன.
ஸ்பெயினின் தலைநகரில், ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது, எதிர்ப்பாளர்கள் கைதட்டி, இனி பொலிஸ் வன்முறை இல்லை மற்றும் பப்லோ ஹசலுக்கு சுதந்திரம் என்று கோஷமிட்டனர்.
ஆனால், அங்கிருந்த பொலிஸார் மீது போத்தல்கள் மற்றும் கற்கள் வீசப்பட்ட பின்னர், அவர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.
நகரத்தின் பழமைவாத மேயர் ஜோஸ் லூயிஸ் மார்டினெஸ்- அல்மெய்டா வன்முறையை கண்டித்து, ‘வன்முறையாளர்களுக்கும் விதிகளை ஏற்காதவர்களுக்கும் நம் சமூகத்தில் இடமில்லை’ என்று டுவீட் செய்துள்ளார்.