மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக் கண்காணித்து வரும் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் (ஏஏபிபி) தெரிவித்துள்ளது.
மூன்று பேர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்றில் ஒரு பகுதியினர் மூன்று மாதங்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று குழு தெரிவித்துள்ளது. சுமார் 460 பேர் காவலில் உள்ளனர்.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்ப்பைத் தொடர்ந்து, 500 நபர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் இராணுவம் மேலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
சுமார் 495 சிவில் அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டவர்களில் மாண்டலேயில் ஒரு பிராந்திய சுற்றுச்சூழல் அமைச்சரும் உள்ளடங்குகிறார். அதே நேரத்தில் நான்கு ரயில் ஆபரேட்டர்கள் மற்றும் இரண்டு பேர் இராணுவத்தால் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மூன்று பேர் ராகினில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
வளர்ந்து வரும் அரசு ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக எட்டு அரசு ஊழியர்களும் புதன்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனிடையே இணைய ஊடுருவிகள் (ஹேக்கர்கள்) இராணுவ வலைத்தளங்களை குறிவைக்கின்றனர்