பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இதுவரை 800பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 96ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில், இதுவரை மொத்தமாக 67ஆயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 465பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 20ஆயிரத்து 534பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.