இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு தொடரும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இருப்பினும் இந்த செய்திகள் குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படும் மற்றுமொரு தொகுதி தடுப்பூசிகளின் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.