ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள நடவடிக்கைகளின் போக்குகள் பற்றிய உண்மைகளையும் பரிந்துரைகளையும் ஆராய்வதற்கு குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக X-பைல்ஸ் என அழைக்கப்படும் இரகசிய பொருட்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்.