நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 402 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 238 ஆக காணப்படுகின்றது.
அவர்களில் 2,335 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 532 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.