சபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் ஆலய நடை பங்குனி மாத பூஜைக்காக கடந்த 14ஆம் திகதி, தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி, நடையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. அந்தவகையில் மாத பூஜையின் தொடர்ச்சியாக ஆறாட்டு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, சன்னிதானத்தில் தந்திரி தலைமையில் சுத்திகிரியை பூஜை,நேற்று நடத்தப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விழா, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.