இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று மட்டும் 322 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் கம்பஹாவில் 66 பேருக்கும் இரத்தினபுரியில் 39 பேருக்கும் கொழும்பில் 36 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 31 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் களுத்துறையில் 23 பேரும் காலியில் 18 பேரும் கண்டியில் 16 பேரும் நுவரெலியாவில் 14 பேரும் மொனராகலையில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் 9, முல்லைத்தீவில் 6, மாத்தறை மற்றும் கிளிநொச்சியில் தலா 5 பேரும் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையில் 4 பேரும் அம்பாறையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் பொலன்நறுவையில் தலா இரண்டு பேருக்கும் மட்டக்களப்பு மற்றும் கேகாலையில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ள தேவேளை கொரோனா தொற்றில் இருந்து 86 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.