கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதென முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது. “கடந்த வருடம், செப்டெம்பர் 11ஆம் திகதி, அதிகளவாக 24 ஆயிரத்து 886 பேர் வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.
ஆனால், தற்போது ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடக்கின்றது.
ஆகையினால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிக்குமாயில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.