ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, பின்லாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஒரு வார காலம் ஆகலாம் என்பதால், அதுவரை அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை பின்லாந்து நாட்டு மக்களுக்கு செலுத்த அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தன.
எனினும், தற்போது ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், மீண்டும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கியுள்ளன.