மத்திய வங்கி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கும் கொரோனா தொற்றில்லை என உறுதியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பத்திர மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த எண்மர் மீது பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் 8 பேருக்கு 23 ஆம் திகதிவத்துறை விளக்கமறியலை நீடித்து கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.