உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது.
149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கை 129ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில், மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து முடி சூடியுள்ளது.
இதற்கடுத்து, டென்மார்க் (2), சுவிற்சர்லாந்து (3), ஐஸ்லாந்து (4), நெதர்லாந்து (5), நோர்வே (6), சுவீடன் (7), லக்சம்பேர்க் (8), நியூசிலாந்து (9) மற்றும் ஆஸ்திரியா (10) ஆகிய நாடுகள் முறைய இரண்டு முதல் 10 இடங்களில் உள்ளன.
மேலும், அவுஸ்ரேலியா (11), இஸ்ரேல் (12), ஜேர்மனி (13), கனடா (14), அயர்லாந்து (15), கொஸ்ராரிகா (16), பிரித்தானியா (17), செக் குடியரசு (18), அமெரிக்கா (19) மற்றும் பெல்ஜியம் (20) ஆகிய நாடுகள் 11 முதல் 20 இடங்களில் உள்ளன.
இதேவேளை, இந்தியா 139ஆவது இடத்திலும் சீனா 84ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் இறுதி இடமான 149ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கணக்கெடுப்பில் கொரோனா வைரஸ் பரவல் விளைவுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் பயணங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், ஆரோக்கியமான ஆயுட்காலம் மற்றும் குடியிருப்பாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.