முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடக்க அனுமதிக்க கொவிட்-19 சட்டத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள், இதற்கு அனுமதி கோரி உட்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
லிபர்ட்டி மற்றும் பிக் பிரதர் வாட்ச் பிரச்சாரக் குழுக்கள் அனுப்பியுள்ள இந்த கடிதத்தில், எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவது மனித உரிமை என தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் தற்போதைய முடக்கநிலை விதிமுறைகளின் கீழ், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்கு வீட்டை விட்டு வெளியேற முடியும் என தெரிவிக்கப்படவில்லை.
கடந்த வார இறுதியில், சாரா எவரார்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை கைது செய்ததாக பொலிஸார் விமர்சிக்கப்பட்டனர்.