இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்கள் இதுவரையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த குடும்பங்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.