இலங்கையில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 299 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 58ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 546 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















