குடிவரவிற்கான புதிய கொள்கையை வகுத்து, அதனை உள்த்துறைச் செயலாளர் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். சபாநாயகர் அவர்களே, “குடிவரவிற்கான எங்களின் புதிய திட்டம் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட விரும்புகிறேன்.
சுதந்திரமான நடமாட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்து புள்ளிகள் அடிப்படையிலான குடிவரவு முறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டபூர்வமான குடிவரவின் கட்டுப்பாட்டை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சட்டவிரோத குடிவரவின் சவால்களை நாங்கள் இப்போது எதிர்கொள்கிறோம். பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள எங்கள் புகலிடம் வழங்கும் முறையின் முக்கிய மாற்றங்களை நான் அறிமுகப்படுத்துகிறேன். ஒரு புதிய, விரிவான, நியாயமான, ஆனால் உறுதியான நீண்டகால திட்டம்.
ஏனென்றால், மக்கள் இறந்துகொண்டிருக்கும் போது, இது குறித்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். கடலில், பாரவூர்திகளில், கப்பல் கொள்கலன்களில் என பிரித்தானியாவுக்கு சட்டவிரோத பயணங்களை ஒழுங்கு செய்யும் குற்றவாளி கும்பல்களின் கைகளில் தமது உயிர்களை மக்கள் பணயம் வைக்கிறார்கள். இந்த இறப்புகளைத் தடுப்பதற்கு, இதற்குக் காரணமாகவிருக்கும் வர்த்தகமான மக்களை வைத்து சட்டவிரோதமாக செய்யும் இதனை நாம் கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டும்.
சட்டபூர்வமான குடிவரவினால் எங்கள் சமூகம் வளம்பெறுகின்றது. பிரித்தானியாவிற்குச் சட்டபூர்வமாக வந்து பிரித்தானியாவைக் கட்டியெழுப்ப உதவியவர்களை நாம் கொண்டாடுகிறோம். நாங்கள் எப்போதும் அதனைச் செய்வோம்.
2015 ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் துன்புறுத்தல்களிலிருந்து தஞ்சம் கோரும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏறத்தாள 25,000 பேரை நாங்கள் மீள்குடியமர்த்தியுள்ளோம். இது எந்தவொரு ஏனைய ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளிலும் கூடுதலானதாக அமைகிறது.
ஏதிலிகள் குடும்ப மீளிணைவு மூலம் 29000 இற்கு மேற்பட்ட நெருங்கிய குடும்ப உறவினர்களை வரவேற்றுள்ளோம். மேலும், கொங்கொங்கிலுள்ள 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு வழிவகை செய்யும் விதத்தில் குடியுரிமை பெறக்கூடிய ஒரு வழியை உருவாக்கினோம்.
உதவி தேவைப்படுவோர்களுக்கு உதவுவதைப் பொறுத்தளவில், பிரித்தானிய மக்கள் நியாயமானவர்களாகவோ பெருந்தன்மையான வர்களாகவோ இல்லை என யாரும் சொல்ல முடியாது. ஆனால், மேலும் குடிவரவு முறையின் நீண்ட பகுதிகள் மீறல்களுக்கு வழிவகுப்பதை பிரித்தானிய மக்கள் இனங்காண்கின்றார்கள். எமது புதிய குடிவரவுத் திட்டத்தின் மையமாக ஒரு எளிமையான, நியாயமான கொள்கை உள்ளது.
பிரித்தானியாவின் புகலிட முறையினை அணுகுவதென்பது தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும், அது ஆள்கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்தும் இயலுமையின் அடிப்படையிலானதாக இருக்கக் கூடாது. புகலிடம் கோரக்கூடிய பிரான்ஸ் போன்ற பாதுகாப்பான நாடுகளிலிருந்து நீங்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் உள்நுழைந்தால், புகலிட நோக்கமான துன்புறுத்தல்களிலிருந்து விடுபடுவதை நீங்கள் தேடுபவர் அல்ல.
மாறாக, நீங்கள் பிரித்தானியாவை உங்களது விருப்பத் தெரிவாகக் கொள்கிறீர்கள். வேறு எங்கும் செல்ல முடியாதவர்களின் இடத்தை நீங்கள் இவ்வாறு பயன்படுத்துகிறீர்கள். ஆள்கடத்தல்காரர்களினால் ஏற்படுத்தப்படும் சட்டவிரோத புகலிடத்திற்கான வழிகளின் அழுத்தத்தின் கீழ் எங்களுடைய முறைமையானது உடைந்துகொண்டிருக்கிறது.
உண்மையான தேவையுள்ளவர்களையும் பார்க்க, கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்தக்கூடிய இயலுமை உடையவர்களுக்கு வழிசமைக்கும் இந்த சட்டவிரோத வழிகளின் இருப்பானது மிகவும் நியாயமற்றது. எங்களது புகலிட முறையின் கொள்ளளவு வரம்பற்றதல்ல.
இந்த சட்டவிரோத வழிகளினால் பொருளாதரமீட்டும் நோக்கோடு வருகைதருவோர்களினால், உண்மையாக பாதுகாப்புத் தேடும் மற்றவர்களுக்கு சரியாக உதவி வழங்குவதில் எங்களுடைய இயலுமை மட்டுப்படுத்தப்படுகிறது. உண்மையாக பிரித்தானியாவில் மீள்குடியமர காத்திருப்போருக்கு இது மிகவும் நியாயமற்றதாக அமைகிறது.
மேலும், இது பிரித்தானிய மக்களுக்கும் நியாயமானதல்ல. முக்கியமான பொதுச் சேவைகளுக்கும் புகலிடமுறைக்குமாக பிரித்தானிய மக்கள் வரி செலுத்துகிறார்கள். புகலிட முறைக்கான செலவானது வானைத்தொடுமளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 1 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாகச் செலவாகியுள்ளது.
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறும் 32,000 இற்கும் அதிகமான முயற்சிகள் 2019 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 8500 மக்கள் இவ்வாறு சிறிய படகுகளில் வருகை தந்துள்ளனர். அதில் 87% ஆனோர் ஆண்கள். 74% ஆனோர் 18- 39 வயதெல்லைக்குள் இருப்பவர்கள்.
இந்த முறைமையினால் பாதுகாக்கப்பட வேண்டிய அந்தப் பெண்கள் மற்றும் குழந்தைகள் எங்கே என நாமே நம்மைக் கேள்விகேட்டுக்கொள்ள வேண்டும். இந்தப்புகலிட கோரிக்கை அதிகமாக இருக்கிறது. 109,000 புகலிடக் கோரிக்கைகள் வரிசையில் இருக்கின்றன. 52,000 பேர் புகலிடத்திற்கான முதற்கட்ட முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். இதில் ஏறத்தாள முக்கால் பங்கினர் ஒரு வருடமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ காத்திருக்கின்றனர்.
புகலிடக் கோரிக்கையில் தோல்வியடைந்த 42,000 பேர் தமது புகலிட மீள்கோரிக்கைகள் மறுக்கப்பட்ட பின்பும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. பொருளாதார நோக்கிலான குடிவரவாளர்கள் மற்றும் குற்றவாளிகளின் சுரண்டலுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள முறைமையினுடன் எங்களது குடிவரவுச் சட்டங்களைச் செயற்படுத்துவதில் தொடர்ச்சியாகச் தவறிவருவதால், மக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருவதுடன் எமது உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர். அதனால்தான், எங்களது புதிய குடிவரவுக்கொள்கையானது மூன்று நியாயமான ஆனால் உறுதியான நோக்கங்களால் கொண்டுவரப்படுகின்றது.
முதலாவதாக, உண்மையாகப் புகலிடம் தேவைப்படுவோரைக் காப்பாற்றவும் அவர்களுக்கு உதவவும் வகையில் எங்களது முறைமையின் நியாயத்தன்மையை அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக, பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுப்பதற்காக, ஆள்கடத்தல்காரர்களின் ஆள் கடத்தல் வணிக வழிகளைத் தகர்த்து அதனால் ஆபத்திற்குள்ளாகும் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
மூன்றாவதாக, பிரித்தானியாவில் இருப்பதற்கு உரிமையில்லாதவர்களை இலகுவாக பிரித்தானியாவிலிருந்து அகற்றுவது.
சபாநாயகரே, நான் இது ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்கின்றேன். முதலில், தேவைப்படுவோர்க்கு நாம் தொடர்ந்தும் பாதுகாப்பான புகலிடம் அளிப்போம். பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வழிகளில் வருவோர்களுக்கு எமது ஆதரவை வலுப்படுத்துவோம்.
மீள்குடியேற்ற வழிகளில் பிரித்தானியாவுக்கு வருவோர்கள் காலவரையற்ற முறையில் இங்கு தங்குவதற்கு அனுமதியளிக்கப் படுவார்கள். ஆங்கிலம் கற்கவும், வேலை தேடவும் மற்றும் சமூக ஒருங்கிணைவுக்குள்ளாகவும் என அவர்கள் மேலும் ஆதரவை பெறுவார்கள். மற்றும் அநீதிக்குள்ளானவர்களுக்கு மேலும் உதவுமாறு நான் செயற்படுவேன். பிரித்தானிய தேசிய சட்டத்தைத் திருத்துவதன் மூலம், கரீபியன் தீவுகளிலிருந்து பிரித்தானியாவிற்குள் குடியேற்றப்பட்டவர்களின் தலைமுறை இலகுவாக பிரித்தானியக் குடியுரிமை பெற வழிசெய்யப்படும்.
இரண்டாவது நோக்கமானது எங்களது அணுகுமுறையில் ஒரு படிமாற்றத்தைக் குறிக்கிறது. ஏனெனில், சட்டவிரோத உள் நுழைவையும் அதனை ஊக்குவித்து மக்களின் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குவதையும் தடுப்பதில் எங்களது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.
புகலிடத் தஞ்சம் கோரக்கூடிய பிரான்ஸ் போன்ற பாதுகாப்பான நாட்டினூடாகவே பெரும்பாலான சட்டவிரோத குடிவரவாளர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைகிறார்கள். குடிவரவாளர்களைக் கவர்ந்திழுக்குமாறுள்ள எங்களது முறைமையிலுள்ள விடயங்களைக் குறைப்பதோடு சட்டவிரோத நுழைவை ஊக்குவிக்காதபடி நாம் செயற்பட வேண்டும்.
முதன்முறையாக, சட்டபூர்வமாகவா அல்லது சட்டவிரோதமாகவா உள்நுழைந்தார்கள் என்பது அவர்களது புகலிடக் கோரிக்கைகளின் முன்னேற்றங்களிலும் மற்றும் அவர்களது புகலிடக் கோரிக்கை வெற்றியளித்தால் அது பிரித்தானியாவில் அவர்களது அந்தஸ்திலும் தாக்கம் செலுத்தும்.
நாங்கள் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதுவதோடு, புகலிடக்கோரிக்கை கோரியிருக்கக்கூடிய பாதுகாப்பான நாட்டினூடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்களை நாட்டை விட்டு அகற்றுவதற்கான ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படும்.
நாட்டை விட்டு அகற்றுவது சாத்தியமில்லாத இடங்களில் மட்டும், சட்டவிரோதமாக உள்நுழைந்தும் வெற்றிகரமான புகலிடக்கோரிக்கைகளைக் கொண்டவர்கள் தற்காலியப் பாதுகாப்பு அந்தஸ்தைப் பெறுவார்கள். இது பிரித்தானியாவில் அவர்கள் நிலையாக குடியமர்வதற்கான இயல்பான உரிமை அன்று. அவர்களை நாட்டை விட்டு அகற்றுவதற்கு கிரமமாக மறுமதிப்பீடு செய்யப்படும் என்பதோடு பயன்களைப் பெறுவதில் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பே கிடைக்கும் என்பதுடன் அவர்களுக்கு தமது குடும்பத்துடன் மீளிணையும் உரிமையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும். எங்களது கடுமையான புதிய நிலைப்பாடு பின்வருமாறு அமையும்.
ஆள்கடத்தல் மற்றும் அதற்கு உதவியளிப்போர்களுக்கு அதிகபட்ச வாழ்நாள் சிறைத்தண்டனை புதிய சட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
தமது பிள்ளைகளெனப் பாசாங்கு செய்யும் நீதியற்ற நபர்களைத் தடுப்பதற்கான புதிய விதிகள் எல்லைப்படைக்கான நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்தல். பிரித்தானியாவில் இருப்பதற்கு உரிமையில்லாதவர்களை துரிதமாக நாட்டை விட்டகற்ற முயற்சிப்போம். விரைவான மேன்முறையீட்டுச் செயன்முறையை உருவாக்குதல்.
மேன்முறையீட்டு முறையை நெறிப்படுத்துதல் மற்றும் புகலிடக்கோரிக்கையில் தோல்ல்வியடைந்தோர்களும் ஆபத்தான வெளிநாட்டுக் குற்றவாளிகளும் நாட்டை விட்டு விரைந்தகற்றுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இறுதி நிமிடக் கோரிக்கைகள் மற்றும் மேன்முறையீடுகளால் நீதிமன்றங்களின் செயற்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்தும் தகுதியற்ற உரிமைக் கோரிக்கைகளை நாங்கள் சமாளிப்போம்.
அடிப்படை நியாயமற்ற கோரல்கள் தம்மையும் மனமுறிவடையச் செய்கிறது என சட்டவாளர்கள் எனக்குச் சொல்கிறார்கள்.
ஏனெனில், நீண்டகாலமாக எமது நீதிப்பொறிமுறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும், தடுப்பிலுள்ள முக்கால்வாசி குடிவரவாளர்கள் இறுதிநேரப் புதிய கோரல்களைச் செய்கின்றனர். இந்த சவாலான கோரல்களில் 10 இல் எட்டு இறுதியாக பிரித்தானியாவில் தங்குவதற்கான வலிதான காரணமல்ல என மறுக்கப்படுகிறது. போதும் போதும்……….
எல்லாக் கோரல்களையும் வெளிப்படையாக மேற்கொள்ளுமாறு கேட்கும் “ஒரு நிறுத்த” செயன்முறையை எமது புதிய திட்டம் அமைக்கிறது. தகுதியற்ற முடிவில்லாத நேர்மையற்ற கோரல்களை விரக்தியாக அகற்றுவது தொடர்பில் இனி இடமில்லை. மேலும் நீதியைத் தடுக்க முடியாது.
எங்களது புதிய அமைப்பு விரைவானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும் என்பதோடு மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு ஆதரவளிக்க எமக்கு உதவும். சபாநாயகர் அவர்களே, எமது எல்லைகளின் கட்டுப்பாட்டை மீளப்பெறுவதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளின் மேல் எமது புதிய திட்டம் அமைக்கப்படுகிறது. குற்றச் செயல்களுக்கு வாய்ப்பளிக்காததும் ஆனால் உதவி தேவைப்படுவோர்களுக்கு சொர்ர்க்கபுரியாகவும் இருக்கும் எமது நாட்டின் நன்மதிப்பைப் பேணுமாறு முறைய அமையும்.
விரைவான திருத்தங்கள் மற்றும் வெற்றிக்கான குறுக்குவழிகள் எதுவுமில்லை.
ஆனால், இந்த நீண்டகாலத் திட்டம் உறுதியுடன் பின்பற்றப்படுவது என்பது எமது உடைந்த அமைப்பைச் சரிசெய்யும். திறந்த எல்லைகளை ஏற்கக்கூடிய வேறுபட்ட ஒரு திட்டத்தை எதிர்க்கட்சியினர் விரும்புவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்த சுதந்திரமான நடமாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர்களில் பலர் தயக்கம் காட்டினர். எல்லா குடிவரவுக் கட்டுப்பாடுகளும் இனவெறி மற்றும் பாலியல் பாகுபாடு அடிப்படையிலானவை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதிவுசெய்துள்ளனர்.
மற்றும் எங்களுக்கு இரக்கம் இல்லை என்று சொல்பவர்களுக்கு, நான் எளிமையாக ஒன்றைச் சொல்கிறேன்………. மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது, இப்படியான பயணங்களை நாம் தடுத்து நிறுத்தச் செயற்பட வேண்டும். மற்றும், எங்களது திட்டத்தை நீங்கள் விரும்பவில்லையென்றால், உங்களது திட்டம் எங்கே?
சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற குடிவரவுகளைக் கட்டுப்படுத்த ஒரு பொது அறிவுள்ள அணுகுமுறையை இந்த அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவோம். சட்டவிரோத குடியேற்றத்தின் மனிதாபிமானமற்ற தன்மையைக் கையாள பிரித்தானிய தனது பங்கையாற்றுகிறது. நான் ஜி- 6 இல் உலகளாவிய நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பேன். நான் இவற்றை இந்த அவை முன் முன்வைக்கிறேன்.”
குடிவரவிற்கான புதிய திட்டம் தொடர்பாக உள்த்துறை செயலாளரின் அறிக்கை