இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை சீரம் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறைந்த வருமானம் பெரும் 64 நாடுகளுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகள் தாமதம் ஆகும் என யுனிசெப் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 5 மாதங்களாக குறைவடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.