கொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் (ஒன்லைன்) பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் இந்த தீர்மானம், பிரித்தானியாவின் தடுப்பூசி வழங்கலை பாதிக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மூன்றாவது அலை ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் பரவுவதால் இந்த பேச்சுவார்தை ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி வெளியீட்டு பிரச்சாரம் பிரித்தானியாவை விட மெதுவாக உள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள ஒரு தளம் ஒஃக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது,
கடந்த இரண்டு மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 40 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளில், கால் பகுதி பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டதாக பிரஸ்ஸல்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஐரோப்பிய ஒன்றிய- அமெரிக்க உறவுகள் குறித்து விவாதிக்க பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவுள்ளார்.