தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களில், மூவாயிரத்து 585 பேர் ஆண்களும் 411 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் இருவரும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதில், பத்தாயிரத்து 528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் அதிகாரி, 44 ஆயிரத்து 759 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் வாக்கெண்ணும் பணி உதிர்வரும் மே இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.