நாட்டில் உள்ள அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதம் மற்றும் அரபியை மட்டுமே கற்பிக்கும் மத்ரசாக்கள் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரானவை என்பதால் தடை செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
முஸ்லிம் சமுதாயமும் அமைப்புகளும் ஏற்கனவே மத்ரஸாக்களை தடை செய்ய ஒப்புதல் அளித்துள்ளன என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கற்பிக்கும் மத்ரஸாக்கள் தடை செய்யப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.