இந்திய மீனவர்களுடனான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிடும்போதே இந்திய உயர் ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் நேற்று இரவு இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டமை குறித்து தெரிவிக்கப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மனிதாபிமானத்துடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதை தாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அவசரகால பொருட்களை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு தூதரகத்தின் உதவியை விரைவாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.