கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனம் ஊடாக 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதுடன் இறுதி விதைப்புத் திகதி, கால்நடைக் கட்டுப்பாடு விவசாயக் காப்புறுதி போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், இரணைமடுக் குளத்தின் ஊடான சிறுபோக நெற்செய்கை தவிர, கழிவு வாய்க்கல் மற்றும் ஆறுகளைப் பயன்படுத்தி எந்தப் பயிர்ச் செய்கையையும் அனுமதிக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுபோகச் செய்கை ஆரம்பிக்கப்படும்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் இராஜகோபு, இரணைமடு நீர்ப்பாசனப் பொறியியலாளர் செந்தில்குமரன், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், மாவட்ட கமநல உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.