கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் இந்த ஏவுகணைகளின் சிதைவுகள் எதுவும் தங்கள் கடல் பகுதியில் விழவில்லை என்றும் ஜப்பான் கூறியுள்ளது.