வடகொரியாவின் ஏவுகணை சோதனை, ஜப்பானுக்கு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா தெரிவித்துள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளமை குறித்து பிரதமர் யோஷிகிடே சுகா கருத்து தெரிவிக்கையில்,
‘வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்து இருப்பது ஜப்பான் மற்றும் இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுடனும், தென்கொரியாவுடனும் நெருக்கமாக ஒருங்கிணைப்போம்’ என கூறினார்.
முன்னதாக வடகொரியா, கடந்த 21ஆம் திகதி குறுகிய தொலைவுக்கு செல்கிற 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தமை குறிப்பிடத்தக்கது.